தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் திறந்தாள் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுமென்றும் , வைகோ சார்பில் இந்த ஆலையின் விதிமீறல்கள் குறித்தும் , ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இந்த ஆலை கடைபிடிக்கும் விதிமுறைகள் மற்றும் செய்யும் நலத்திட்ட உதவிகள் குறித்து வாதம் செய்யப்பட்டது.
இதையடுத்து மூன்று தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாக திங்கள் கிழமைக்குள் அளிக்க வேண்டுமென்று கூறி தீர்ப்பை ஒத்து வைத்தது.இந்நிலையில் இன்று தமிழக அரசின் சார்பில் எழுத்து பூர்வமான தகவல் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…