மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முப்பெரும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தருமபுர ஆதீனத்தின் பவள விழா மலர், திருக்குறள் உரைவளம் மறுபதிப்பு நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர், வரும் செப்டம்பர் மாதம் திமுகவின் பவள விழா கொண்டாடப்பட உள்ளது. அறநிலையத்துறையை மிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை வரும் போது ஆன்மீகவாதிகளும் போராடி உள்ளனர். ஆன்மிகம், தமிழ், மருத்துவம், சமூகம் என எண்ணற்ற சேவை பணிகளை தருமபுரம் ஆதினம் செய்து வருகிறது. கோயில்களை பழமைமாறாமல் புதுப்பிக்க ரூ.100 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், தருமபுர ஆதினம் கூறுகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி ஆன்மீக ஆட்சியாக தான் நடைபெற்று வருகிறது. காலை உணவு திட்டத்தை பரவலாக தொடங்கியிருக்கும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…