தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முப்பெரும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தருமபுர ஆதீனத்தின் பவள விழா மலர், திருக்குறள் உரைவளம் மறுபதிப்பு நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர்,  வரும் செப்டம்பர் மாதம் திமுகவின் பவள விழா கொண்டாடப்பட உள்ளது. அறநிலையத்துறையை மிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை வரும் போது ஆன்மீகவாதிகளும் போராடி உள்ளனர்.  ஆன்மிகம், தமிழ், மருத்துவம், சமூகம் என எண்ணற்ற சேவை பணிகளை தருமபுரம் ஆதினம் செய்து வருகிறது. கோயில்களை பழமைமாறாமல் புதுப்பிக்க ரூ.100 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், தருமபுர ஆதினம் கூறுகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி ஆன்மீக ஆட்சியாக தான் நடைபெற்று வருகிறது. காலை உணவு திட்டத்தை பரவலாக தொடங்கியிருக்கும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்