அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது- ஸ்டாலின்
- குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர்.
- அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் சில பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலைகளில் கோலம் போட்டு அந்த கோலத்தில் NO CAA, NO NRC என்று அவர்கள் எழுதி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் செய்தனர்.இதனை அடுத்து கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை விடுவித்தனர்.
அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
சென்னை பெசண்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய,
6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. pic.twitter.com/Ran4FE5r2V— M.K.Stalin (@mkstalin) December 29, 2019
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம்.சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்ப பெறப்பட வேண்டும்.மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.