கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் தொடர்பாக மாணவிகளிடம், இன்று மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
பாலியல் புகார்:
சென்னையில் இயங்கிவரும் கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
விசாரணை:
மாநில மகளிர் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி.மகேஸ்வரன் தலைமையில் மாணவிகளிடம் இன்று விசாரணை நடைபெற்றது. நேற்று கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் தொடங்கிய விசாரணை இன்று இரண்டாவது நாளாக மாணவிகளிடம் நடத்தப்பட்டது.
விசாரணை நிறைவு:
30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுமார் 20 நிமிடங்கள் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு இடையூறு ஏதும் ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்த விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…