மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்

தேவேந்திர குல வேளாளர் ஒரே பொதுப் பெயரில் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில், பொதுப் பெயரிட” மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய சாதிகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் ஒரே பொதுப் பெயரில் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இது தொடர்பான போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று “தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட” மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்.தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரிட்டாலும் 7பிரிவினரின் தற்போதைய சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பட்டியல் வகுப்பில் தொடர ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பிரிவினர் ஏற்கனவே பெற்று வரும் சலுகைகள் தொடரும். இதற்கான ஆணைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு விரைவில் பிறப்பிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரிட்டாலும் 7பிரிவினரின் தற்போதைய சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பட்டியல் வகுப்பில் தொடர ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.
இப்பிரிவினர் ஏற்கனவே பெற்று வரும் சலுகைகள் தொடரும். இதற்கான ஆணைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு விரைவில் பிறப்பிக்கும். https://t.co/9Y98ZARG4H
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 4, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025