நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:இந்த பணிக்காக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்- தேர்தல் ஆணையம் உத்தரவு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்களாக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,வருகின்ற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,சென்னை மாநகராட்சி உட்பட 38 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களாக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வருகின்ற பிப்.4 ஆம் தேதி முதல் மாவட்டங்களில் பணிகளை தொடங்கவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்களாக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. pic.twitter.com/5z6IlJl3cl
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) February 2, 2022