மழை தீவிரம்.. 14 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மாநில பேரிடர் மேலாண்மைத்துறை!

State Disaster Management

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் பருவமழை சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்..!

இதனால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் 17 கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்பட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழை மற்றும் புயலை முன்னிட்டு ஆட்சியர்கள் அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மழை தீவிரம் காரணமாக 14 மாவட்ட ஆட்சியர்கள் அலெர்ட்டாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்