ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து கடலூரில் மாநில செயற்குழு கூட்டமானது பாஜக மேவிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் பிரதான கட்சிகள் முழுவீச்சில் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளன.
கடந்த முறை 2021 தேர்தலில் திமுக – அதிமுக என இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை களம் இறக்கியது. அதேபோல இந்த முறையும் நடைபெறுமா அல்லது திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடுமா என்ற சூழல் நிலவி வருகிறது. அதே போல மற்ற கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடும் என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசி பொருளாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் அதிமுக கூட்டணியிலுள்ள பாஜக தனது நிலைப்பாடு குறித்து இன்று கடலூரில் ஆலோசனை நடத்துகிறது. கடலூரில் மாநில செயற்குழு கூட்டமானது பாஜக மேவிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? பாஜக தனித்து களம் காண உள்ளதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதா? என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் நாங்கள் போட்டியிடவில்லை அதிமுக தான் போட்டியிடுகிறது என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…