தி.மு.க. அரசின் வரவு-செலவு பட்ஜெட் தனி வரலாறு படைத்துள்ளது! – ஆசிரியர் கி.வீரமணி

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார்.
ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்
தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி.மு.க. அரசின் வரவு-செலவு பட்ஜெட் தனி வரலாறு படைத்துள்ளது! பெரியார்-திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டானது இது. வெறும் வரவு-செலவு பட்ஜெட் அல்ல, கொள்கை பட்ஜெட் என்ற சிறப்புடையது. அரசின் அடிக்கட்டுமானத்தையும், கொள்கை அடிப்படையையும் கொண்டது என்பதற்கான எடுத்துக்காட்டான பட்ஜெட் இது.’ என பதிவிட்டுள்ளார்.
*தி.மு.க. அரசின் வரவு-செலவு பட்ஜெட் தனி வரலாறு படைத்துள்ளது!
*”பெரியார்-திராவிட மாடலுக்கு” எடுத்துக்காட்டானது இது
*வெறும் வரவு-செலவு பட்ஜெட் அல்ல, கொள்கை பட்ஜெட் என்ற சிறப்புடையது
*அரசின் அடிக்கட்டுமானத்தையும், கொள்கை அடிப்படையையும் கொண்டது என்பதற்கான எடுத்துக்காட்டான பட்ஜெட் இது— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) March 20, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025