முதல்வர் உத்தரவின் பேரில் மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாக பயன்படுத்தி பாதுகாப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அடை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில், சமீப நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததையடுத்து, இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து சென்னை பெரிய நகர், புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இராதாகிருஷ்ணன் அவர்கள், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வந்தது. இருப்பினும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாக பயன்படுத்தி பாதுகாப்புடன் இருக்குமாறும், கூட்டம் சேராமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா தொற்றை குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் லேசான அறிகுறிகள் ஏற்பட்டாலும் பரிசோதனை செய்து தங்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…