"வேகம் ஒருநாள் என்னைக் கொல்லக்கூடும்"என்ற வாசகத்தை பைக்கில் எழுதி வேகமாக சென்ற இளைஞர் உயிரிழப்பு ..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.தனது பல்சர் 220 இருசக்கர வாகனத்தில் தனது நண்பனை அழைத்துக்கொண்டு தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சின்னாண்டிக்குழி சாலை சென்ற போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார்.
ஆகாஷ் உடன் வந்த நண்பன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆகாஷ் தனது பல்சர் இருசக்கர வாகனத்தின் பின்னால் “ வேகம் ஒருநாள் என்னைக் கொல்லும் , யாரும் அழ வேண்டாம்” என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.