தமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்

தி.மு.க அரசு ஆளுநர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியுள்ளார்.
இந்த உரையின் போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது. வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக இருக்கும் இந்த உரையில் உள்ள அம்சங்களை எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.
ஏனெனில், மேகேதாட்டு அணை பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு ஆளுநர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
ஏனெனில், மேகேதாட்டு அணை பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு ஆளுநர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.2/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 21, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024