Governor RN Ravi - Tamilnadu CM MK Stalin [File Image ]
தமிழக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் , திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசக்குமான கருத்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், தமிழக (திமுக) அரசு நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாதப்படுத்தி திருப்பி அனுப்புவதும், கிடப்பில் போடுவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
இதனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, அரசு நிறைவேற்றிய தீர்மானங்களை கிடப்பில் போடுவது கவலைக்குரிய விஷயம் ஆகும். மசோதா காலதாமதம் செய்ய கூடாது எனவும் இது தொடர்பாக தமிழக ஆளுநரின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சகமும் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் எவ்வளவு உயர்ந்தது.? ஏன் நிறுத்திவைப்பு.?
இதனை அடுத்து தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி கிடப்பில் இருந்த 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த நவம்பர் 13ஆம் தேதி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த சட்ட மசோதாக்களைமீண்டும் அப்படியே நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப இன்று தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.
இன்று காலை தொடங்கிய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா மற்றும் ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களை ஆளுநர் பொறுப்பில் உள்ளவர்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார்.
என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம். தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டப்பேரவையில், நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநர்களின் பொறுப்பு. அந்த மசோதாவில் விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. இருக்கும் வரை மக்களாட்சி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே மரபு. தமிழக அரசு முன்னரே நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களை, எந்த காரணமும் குறிப்பிடாமல் ஆளுநர் ஒப்புதல் அல்லிக்காமல் நிறுத்தி வைப்பதாக தெரிவித்து, அதனை திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல.
இந்திய அரசமைப்பு சட்டபிரிவு 220-ன் படி, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள், மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்திட வேண்டும் என்பதை சட்டபேரவை கவனத்திற்கு கொண்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 143இன் கீழ் மறு ஆய்வு செய்திட இந்த மாமன்றம் தீர்மாணிக்கிறது என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என சட்டப்பேரவை தீர்மானங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மற்ற பெரும்பாலான கட்சிகள் முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…