திட்டமிட்டு பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

போதைப் பொருளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

edappadi palanisamy sabanayagar appavu

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதிமுக சார்பில் மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முன்மொழியப்பட்டது.

இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால்  ஆவேசமாக அதிமுகவினர் பேசியதை அடுத்து, ” கேள்விகளுக்கு பதிலளிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். உங்கள் கேள்விகளை கேளுங்கள், அதுதான் மரபு. கை நீட்டி, கூச்சல் போடுவது மரபல்ல’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனை அடுத்து தொடர் அமளியில் அதிமுக உறுப்பினர்கள் ஈடுபட்ட காரணத்தால் அதிமுகவினரை வெளியேற்றிவிட்டு அவர்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி “எங்களை திட்டமிட்டு பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார்” என குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார்.

இது குறித்து பேசிய அவர் ” திமுக அரசு போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்த தவறிவிட்டத. காவலரையே தாக்கி கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் கும்பலுக்கு தைரியம் எப்படி வந்தது? போதைப்பொருளை கட்டுப்படுத்த இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்றைக்கு பயிற்சி மருத்துவரை கடத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட முயன்றார்கள். இதனை தான் நான் இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வர வாய்ப்பு கேட்டேன். ஆனால், இதனைக்கூட  புரிந்துகொள்ளாமல் திட்டமிட்டே வேண்டுமென்றே சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். எதிர்க்கட்சியை பொறுத்தவரையில் மக்களுடைய பிரச்சனைகளை புரிந்துகொண்ட அரசின் கவனத்திற்கு எடுத்து வருவது தான் எங்களுடைய நிலைப்பாடு.

ஆனால், இந்த அரசு மக்களை பற்றி கவலையே படாதா அரசு குடும்பத்தை மட்டுமே பற்றி கவலைப்படக்கூடிய அரசு. இன்றயை தினம் யாரும் தலையீட கூடாது என முதல்வரின் மகன் உதயநிதி பேசுகிறார். இப்படி பேசுவது என்னை பொறுத்தவரை சர்வாதிகாரம்..மக்களுக்காக தான் சட்டமன்றம்.. சட்டமன்றம் மக்களுக்காக அல்ல..இதனை முதல்வரும் சட்டப்பேரவை தலைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவதற்காக தான் வந்திருக்கிறோம். ஆனால், ஸ்டாலின் அவருடைய வீட்டு மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்காக வருகை தந்திருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் பேசி முடித்த பிறகு நீங்கள் உங்களுடைய பதிலுரையை தொடருங்கள். பேச வாய்ப்பு கொடுக்காமல் சட்டப்பேரவை தலைவர், முதல்வர் ஆகியோர் எங்களை வெள்யேற்றுவதில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். நாங்கள் பேச ஆரம்பித்தாள் அவர்களை எதாவது குறை சொல்லிவிடுவோமோ என்பதால் தான் எங்களுக்கு பேச அனுமதி அளிக்காமல் வெள்யேற்றிவிட்டார்கள்” எனவும் காட்டத்துடன் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்