தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய மகன்.! நடந்தது என்ன.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • மதுரை மாவட்டத்தில், அசாருதின் என்ற இளைஞர் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.
  • மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இந்த சசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த சிக்கந்தர் மைதீன் என்பவரது மகன் அசாருதீன் தனது தாய் மற்றும் அண்ணன் யாசர் அரபாத் உடன் வாழ்ந்து வந்த நிலையில், அசாருதின் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு அடிக்கடி துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். மகனின் இதுபோன்ற செயலால் மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த அசாருதீனின் கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் மகனை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர்  உயிரிழந்த அசாருதீனின் உடலை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையாகிய இளைஞரின் செயலால் தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் அப்டேட் முதல்..பாகிஸ்தான் ரயில் கடத்தல் வரை!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

3 minutes ago

இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க! திருமாவளவன் ஸ்பீச்!

சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

1 hour ago

வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…

2 hours ago

சுனிதாவை அழைத்துவரும் திட்டம் ஒத்திவைப்பு! கடைசி நேரத்தில் வந்த திடீர் சிக்கல்?

வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…

2 hours ago

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…

3 hours ago

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

12 hours ago