குடிபோதையில் தாயை கொன்ற மகன், வெளியான அதிர்ச்சி சம்பவம்.
மயிலாடுதுறை சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவர் தனது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்ட குழி தோண்ட, அதில் மனித எலும்பு மற்றும் உடல் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதனையடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இறந்தவர் திருக்கருக்காவூர் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வந்த சாந்தி என்ற மூதாட்டி என்பது தெரிய வந்தது. இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக மூதாட்டியின் மகனான வேலு கூறியது தெரிய வந்தது.
அதனையடுத்து, வேலுவிடம் விசாரணை மேற்கொண்ட போது,தாயிடம் வழக்கமாக சொத்தை பிரித்து தர கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு ஏற்படுவதும், 10 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் குடித்து விட்டு வந்த வேலு மூதாட்டியை தாக்கி உயிரிழந்ததும், அதன்பின் வேலு தனது வீட்டின் எதிரே மூதாட்டியின் சடலத்தை குழி தோண்டி புதைத்ததும் அம்பலமானது. அதனையடுத்து வேலுவை சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…