முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரின் மகன்..!
ஆதித்யா தாக்கரே அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மகனும், முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி உடனிருந்தார். ஆதித்யா தாக்கரே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், சிவசேனா நிறுவனர் பால் தாக்ரேவும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த சந்திப்பு மரியாதையினிமித்தமானது என கூறப்படுகிறது.