எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்…! நடந்தது என்ன…?

Default Image

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி மகனின் சடலம்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் ஆவார். இவர் வேளச்சேரியில் தங்கி, ஐஐடி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உன்னிகிருஷ்ணனின் அறைக்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த அறையில், தற்கொலைக்கான கடிதம் ஒன்றினை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், நான் என்ன செய்கிறேன் என்பதே தெரியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர் சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோல் எடுத்து சென்று தீயிட்டு கொளுத்தியுள்ளதாகவும், அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்