நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இது ஒருபுறம் இருந்தாலும் தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான பிடதி என்ற ஆசிரமம் நடைபெற்றது வருகிறது.இந்த ஆசிரமத்தில் ஈரோட்டை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சேர்க்கப்பட்டார்.இவருக்கு ஆசிரமத்தில் பிராணசாமி என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் பார்க்க ஆசிரமத்தில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆசிரமத்தில் அனுமதி அளிக்கவில்லை என்றும் மகனை மீட்கக் கோரி அவரது தயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவரது வழக்கில், பிடதி ஆசிரமத்தில் தனது மகன் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தா மற்றும் ஈரோடு போலீசார் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கினை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது.
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…