ஜாக்டோ-ஜியோ பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்- திருமாவளவன்
ஜாக்டோ-ஜியோ பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.இதன் பின்னர் அவர் கூறுகையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கோரிக்கையை பரிசீலிக்காததால்தான் மீண்டும் போராட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.