அவதூறு பேச்சு ..!என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை..! ஹெச்.ராஜா எதிர்ப்பு..!

Published by
Venu

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.

இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தலைமறைவாகிவிட்டதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.மறு நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது.இதில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஏற்கனவே அதே நாளில் உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக வழக்கறிஞர்கள் சி.ராஜசேகர்,காங்கிரசை சார்ந்த சுதா,கனகராஜ் மற்றும் ராஜா முகமது உள்ளிட்டோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முறையிட்டனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை விசாரிக்க மறுத்து மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் முறையிட்டவர்களை போலீசிடம் புகாரளிக்க நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளனர்.முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.

ஒரு அமர்வு மறுத்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தாமாக முன் வந்து விசாரிக்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர்  முறையிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையயிட்டுள்ளார்.

அதேபோல்  சி.டி.செல்வம் அமர்வு தன்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை என்று முறையிட்டுள்ளார். மேலும் என் மீது சிடி செல்வம் அமர்வு சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியாது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியும்.

இதற்கு  உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago