உடைந்த நிலையில் புழல் ஏரியின் கரை..! அச்சத்தில் மக்கள்..!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. உணவு மற்றும் குடிநீர் கிடைப்பது கூட மிகவும் சிரமமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது. அந்த வகையில், புழல் ஏரி நிரம்பியுள்ளது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. புழல் ஏரியின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்துள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.