கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி கடந்த 23-ம் தேதி பியூட்டலின் தனது உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து தனது மகளைக் காணவில்லை என்று சரண்யாவின் குடும்பத்தார் வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களைத் தேடி பியூட்டலின் வீட்டிற்கு வந்த போலீசார், விசாரணைக்கு திருமணமான காதல் ஜோடியை அழைத்து வரும்படி கூறிச் சென்று விட்டனர். காவல்துறையினரின் விசாரணைக்காக 25-ம் தேதி பியூட்டலின் அவரது மனைவி சரண்யா மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்கு வெளியே பதுங்கியிருந்த பெண்ணின் உறவினர்கள் இவர்களை சுற்றி வளைச்சி பியூட்டலினை சரமாரியாக தாக்கியதோடு சரண்யாவை அருகிலிருந்த காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த பியூட்டலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தனது மருமகளை அவரது உறவினர்கள் கொலை செய்ய வாய்ப்புள்ளதாக பியூட்டலின் தாயார் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். விசாரணைக்காக காவல்நிலையம் வந்த திருமணமான காதல் ஜோடியை காவல் நிலையத்தில் வைத்தே தாக்கி பெண்ணை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…