பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை …!தமிழக மக்களின் உணர்வுக்கும் ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் …!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுக்கும் ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அனுப்பினார்.தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்ததை அடுத்து ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியது உள்நோக்கம் கொண்டது .தமிழக அமைச்சரவையின் முடிவுக்கும், தமிழக மக்களின் உணர்வுக்கும் ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.