“டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சேவைகள்,மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும்” – ஓபிஎஸ் வாழ்த்து..!

Default Image

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாளான இன்று அவரது சேவைகள்,மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும் என்று ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பத்திரிகை,விளையாட்டு,கல்வி, ஆன்மிகம் என பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவரான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும்,அவரது பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்த நிலையில்,வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது 86-வது பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மகளிர் அணி அமைப்பாளருமான கனிமொழி,சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில்,டாக்டர் ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாளான இன்று அவரது சேவைகள்,மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இனிய தமிழை எளிய முறையில் பொதுமக்களுக்கு வழங்குகின்ற தினத்தந்தி மற்றும் மாலை மலர் நாளிதழ்களின் உரிமையாளராக இருந்தவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள். ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்தவர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 86-வது பிறந்த நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தினையும், மரியாதையினையும் .சிவந்தி தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் ஆதித்தனார் அவர்களின் சாதனைகள், சேவைகள் என்றென்றும் மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும்,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்