ஜூன் 4 இல் “12 ஆம்” வகுப்பு தேர்வு நடைபெறும்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக முழுவதும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 4 இல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் நீட், ஜேஇஇ தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான புதிய தேர்வு தேதிகள் மத்திய மனிதவள அமைச்சார் அறிவித்தார். 

அந்தவகையில், தமிழகத்தில் விடுபட்ட 12 ஆம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12 ஆம் வகுப்புக்கான வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கு ஜூன் 4 இல் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளார். மேலும், 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையயடுத்து, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார். பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

27 minutes ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

50 minutes ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

59 minutes ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

1 hour ago

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : அமலாக்கத்துறை பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…

2 hours ago