இபிஎஸ் குறித்த ரகசியம்… டிடிவி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தல்… ஓபிஎஸ் பேட்டி!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவு தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதன்பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் தான் அவர். சசிகலாவை தரக்குறைவாக பேசி இபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்தவர் என கடுமையாக தாக்கி பேசினார்.
ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் ஒரே ஒருவர் எடப்பாடி பழனிசாமி தான். எம்ஜிஆர் வகுத்த தந்த கட்சியின் சட்ட விதிகளை கல் நெஞ்சம் படைத்தவர்கள் ரத்து செய்து இருக்கிறார்கள். எனவே, அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தாமாக முன்வந்து எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.
செந்தில் பாலாஜி ஜாமீன்… அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு..!
இபிஎஸ் ராஜினாமா செய்யும் வரை தொண்டர்கள் உரிமை காக்கும் போராட்டம், யுத்தம் தொடரும் என கூறிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது வெளியிடுவேன் என்றார். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். அதிமுகவை மீட்க போராட்டம் தொடரும். சசிகலா விரும்பினால் அவரை சந்திப்பேன்.
டிடிவி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது எனவும் கூறினார். மேலும், நேற்று திருச்சியில் பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை. பிரதமரை சந்தித்தபோது வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன். வாய்ப்பு கிடைத்தால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் 5 சவரன் தங்க செயின் பரிசாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.