திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 40 நாள்களுக்கு பிறகு டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் 43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன.
மேலும், மது பிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்பட்டது. சில மாவட்டங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க கூடை உடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் என்றும், சில மாவட்டங்களில் ஆதார் அட்டை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் இயங்கும் ஒரு டாஸ்மாக் கடையில் இரண்டாவது நாட்களாக என்றும் ஆட்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…