அதிமுக அலுவலகத்திற்கு சீல் – ஓபிஎஸ் தரப்பும் முறையீடு
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றதற்கு இடையில்,அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில்,அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிடக்கோரியும், உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தகவல் அளித்துள்ள நிலையில், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.