சென்னையில் உள்வாங்கிய கடல் – மக்கள் பீதி!
சென்னையில் நள்ளிரவில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மௌமரே நகருக்கு அருகே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியது.இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,அதே நாளில் புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால்,புதுச்சேரியிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதன்காரணமாக,கடற்கரையில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில்,சென்னையில் நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 10-15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது.சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.