தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் என அனைத்து குற்றங்களும் பெருகிவிட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரக்கூடியவர் தான் செல்வரத்தினம். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. அகதிகள் முகாமில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர், தொழிலுக்காக தனது நண்பர்களுடன் இணைந்து சென்னையில் தங்கியுள்ளார்.
அங்கு திரையுலகில் கால்பதிக்க விரும்பிய இவர் தற்பொழுது கடந்த சில தினங்களாக சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சின்னத்திரை வழியாக நடித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய தேன்மொழி என்னும் நாடகத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் தங்கியிருந்த சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி உள்ளனர். அதன் பின் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அருகிலிருந்த வாகனங்களை சேதப்படுத்திய அக்கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளது. சம்பவ இடத்திலேயே செல்வகுமார் உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அகதிகள் முகாமில் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…