ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது- அதிரடி அறிவிப்பு..!
ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது. தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
அனைத்து ஆசிரியர்களும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 ம் தேதி பள்ளிக்கு வரும் போது அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.