சென்னை:பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் ரிவர்சில் வந்தபோது,விபத்து ஏற்பட்டதில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே,இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில்,பள்ளி வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் ஒரு காரணம் என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,15 நாட்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்ட நிலையில்,கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…