உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக்கல்வித்துறை.!
சென்னையில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 27ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் குறைத்து வழங்குபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 6வது ஊதிய குழு அடிப்படியில் மே 2009 முன்பு வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும், அதற்கு பின்னர் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும் 3,170 ருபாய் வரை ஊதிய வித்தியாசம் இருக்கிறது. என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்கனவே உண்ணாவிரத்தில் இருந்து வந்த ஆசிரியர்களில் 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகள் 8 பேரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள்ளார். இவர்கள் இன்னும் சில மணிநேரங்களில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.