சென்னை:தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக பள்ளிக் கல்வி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,வருகின்ற சனிக்கிழமை 22.01.2022 ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் 22.01.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…