விலையில்லா கோழி, ஆடு மற்றும் கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
விரைவில் விலையில்லா கோழி, ஆடு மற்றும் கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் உழைக்கும் மகளிருக்கான இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, விலையில்லா கோழி, ஆடு, கறவை பசுக்களுக்காக 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 பயனாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.