ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.
இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தலைமறைவாகிவிட்டதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.மறு நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது.இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே அதே நாளில் உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக வழக்கறிஞர்கள் சி.ராஜசேகர்,காங்கிரசை சார்ந்த சுதா,கனகராஜ் மற்றும் ராஜா முகமது உள்ளிட்டோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முறையிட்டனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை விசாரிக்க மறுத்து மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் முறையிட்டவர்களை போலீசிடம் புகாரளிக்க நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளனர்.முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
ஒரு அமர்வு மறுத்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 25 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.தாமாக முன் வந்து விசாரிக்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் முறையிட்டது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையிட்டது
அதேபோல் சி.டி.செல்வம் அமர்வு தன்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை என்று முறையிட்டார். மேலும் என் மீது சிடி செல்வம் அமர்வு சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியாது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியும்.இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக் கோரி, அரசு தலைமை வழக்கறிஞரிடம் கொடுத்த கடிதம் நிலுவையில் உள்ள நிலையில், இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஹெச்.ராஜா தரப்பு விளக்கத்தை கேட்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…