சனாதன சர்ச்சை… உதயநிதிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!
Udhayanidhi Stalin – கடந்த வருடம் 20203 செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அந்த நிகழ்வில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடன் இருந்தார்.
Read More – ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.!
இது போல, பல்வேறு மேடைகளில் திமுக எம்பி யார் ஆ.ராசாவும் சனாதானம் குறித்து தனது எதிர்ப்புக் கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார். இதனால் இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உதய நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தனர். சனாதனம் குறித்து பொது பொறுப்புகளில் இருக்கும் இவர்கள் சனாதனம் குறித்து பேசுவதால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் எவ்வாறு பொது பொறுப்புகளில் இருக்க முடியும் என்றும், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
Read More – ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்த வழக்கு விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சனாதனம் வழக்கு இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு எதுவும் அறிவிக்கப்படாமல் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
பொது பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர் இவ்வாறு பேசியது தவறு. ஆனால் அதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. பொது பொறுப்பில் இருப்பவர்கள் சரியான வரலாறு தெரிந்து மேடைகளில் பேச வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
Read More – காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.!
அமைச்சர் உதயநிதி தரப்பில் வாழ வாதாடிய வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய அரசியலமைப்பில் பேச்சு உரிமை பற்றி இருக்கிறது. மதம் பற்றி பேசுவதற்கு உரிமை உள்ளது போல, கடவுள் மறுப்பு பற்றி பேசுவதற்கும் உரிமை உள்ளது. இதனை குறிப்பிட்டு நாங்கள் வாதங்களை முன் வைத்தோம். ஆதனால் வழக்கு எந்தவித உத்தரவும் பிறபிக்க முடியாது என நீதிபதி அறிவித்து விட்டார். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் கூறினர்.