ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் மெய்யநாதன்
வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர்.அந்த வகையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,2018,மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில்,தூத்துக்குடியில் உள்ள தங்களது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மெய்யநாதன், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டால், அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார்.