இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது- திருமாவளவன்
இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இலங்கை அதிபர் தேர்தல் முடிவு பெரும் கவலைக்குரியதாக உள்ளது .முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளது பெரும் கவலை அளிக்கிறது.இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முதல்வரிடம் மனு அளித்தேன். சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.உள்ளாட்சி மன்றங்களில் துணை தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு தேவை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.