இன்று தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 1037வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சை பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலில் வருடாவருடம் ஐப்பசி மாதம் மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய தினத்தை கொண்டாடும் வகையில் சதய விழா நடைபெறும்.
அந்த வகையில் கடந்த 2 வருடமாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒருநாள் மட்டும் சதய விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இந்த வருடம் வழக்கம் போல பிரமாண்டமாக 2 நாள் விழாவாக சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முதல் நாள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சதய விழா நாளான இன்று தஞ்சையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில் தஞ்சை பெருவுடையார் மற்றும் உலகமாதேவிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா ஆகியோர் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதன் பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் ராஜ அலங்காரத்துடன் ராஜராஜ சோழன் தஞ்சை முக்கிய பிரதான வீதிகளில் பவனி வரும் நிகழ்வு நடைபெறும்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…