தஞ்சை பெரிய கோவிலின் பிரமாண்ட சதய விழா தொடக்கம்.! ராஜராஜ சோழனுக்கு மரியாதை.!
ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை குறிப்பிடும் வகையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் சதய விழா தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவில் என அளிக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை சதய விழாவாக ஆண்டுதோறும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது.
1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்று ராஜராஜ சோழன் பற்றிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அடுத்து நடன நிகழ்ச்சி, பரிசளிப்பு ஆகியவை இன்று நடைபெறும்.
அதனை அடுத்து நாளை, தஞ்சாவூர் பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபடும். நாளை தன்ஜாவூர் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சதய விழா முடிந்ததும் தஞ்சாவூர் பிரதான வீதிகளில் ராஜராஜ சோழன் வீதி உலா நாளை நடைபெறும். அதற்கேற்றாற் போல தஞ்சை பெரிய கோவில் பிரதான சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.