சென்னை தியாகராய நகரில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் பேசுகையில், நேற்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்திற்கான திரைப்பட வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பதவி ஏற்றதாக தெரிவித்தார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்நிலையில், திரையுலக வாழ்க்கையில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படம் வந்தாலும் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அன்று வர்தகசபை வாசலில் நின்று ஜி.எஸ்.டி வரி எதிர்த்து போராடினேன். மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்த பிறகு மாநில அரசு கேளிக்கை வரியை எதற்காக விதிக்கிறது என்று கேள்வி எழும்பினேன். இந்திய அளவில் இல்லாதவாறு 8% சதவீதம் கேளிக்கை வரி மக்களை வாட்டி வதக்கிறது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு மற்றும் திரைப்படத் துறையில் இருப்பவர்களை எங்களை எதிராகவும், உதிரியாகவும் எண்ணக்கூடாது. திரைப்பட திரையரங்குகள் மூட வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் முடிவுக்களில் ஆளும் கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களை வென்று வருகிறது. இப்போது, மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவு என்பது ஒரு எச்சரிக்கை , அபாய சங்கு, அபாய மணி என்றும், பின்னர் என்னால் இது மட்டும் தான் சொல்ல முடியும் என கூறினார். பின்பு ஊதி கொண்டிருக்கிறாய் அபாய சங்கு இந்த தேர்தலில் ஏற்றுக் கொள்ளவில்லை நான் பங்கு என்று சொல்லி இதை டபுள் மீனிங்ல கூட எடுத்துக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் அரசியலிலுக்கு அதிஷ்டம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…