#BREAKING: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை- அன்பில் மகேஷ்..!

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது, பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் புகார் கூறப்பட்ட ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிகிறது.
பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு ஏற்கனவே உள்ளது என தெரிவித்தார். பத்மா சேஷாத்ரி பள்ளியில் மேலும் சில மாணவிகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளானதாக புகார்கள் வந்ததாக தெரிவித்தார். ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும்.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி வருகிறது. நல்ல ஆசிரியர்களுக்கும் கலங்கம் வரக்கூடாது என்பதற்காக பாலியல் புகார் விவகாரத்தில் குழு அமைக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025