சாலையோர மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை செய்த சாலை பணியாளர்கள்…!
கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையோர மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை செய்த சாலை பணியாளர்கள்.
இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு, தொழிலாளர்கள், தாங்கள் பணிக்காக பயன்படுத்தும் பொருட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில், கரூரில் சாலை பணியாளர்கள் செய்துள்ள பூஜை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, புலியூர் – வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள், சாலையோர மைல் கல்லுக்கு படையலிட்டு, பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடினர். சாலை ஓரத்தில் உள்ள மைல் கல்லை தூய்மைபடுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு, மாலை அணிவித்தனர். பின்னர் சுண்டல், பொரிகடலை, தேங்காய், பழம் ஆகியவற்றை படையலிட்டு, தீபாராதணை காட்டி ஆயுத பூஜையை கொண்டாடினர். சாலை பணியாளர்களின் இந்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.