பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? – மாணிக்கம் தாகூர் கண்டனம்.!
எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பட்டியலில் இருந்து சுப்பையாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமனற்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பை தொடர்ந்து 1,264 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் சுப்பையா ஆகியோர் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர் பட்டியலில் சுப்பையா பெயரை இடம்பெற்றுள்ளதை குறித்து காங்கிரஸ் நாடாளுமனற்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? என்றும் இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவரை உடனே எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சர் ஹரிஷ் வரதனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ?
இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ ?????#AIIMSThoppur https://t.co/MTSvqlxuiy
— Manickam Tagore MP????????✋மாணிக்கம் தாகூர் (@manickamtagore) October 28, 2020