2022-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை சுருக்கமுறை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹு நேற்று தெரிவித்தார்.2022 ஜனவரி முதல் நாளை(1 ஆம் தேதி) தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது.
ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள்.3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள் உள்ளன.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தும் மேற்கொள்ளவதற்காக, சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது.இதில் புதிதாக பெயர் சேர்க்க,நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் முழுவதுமாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.
அதன்படி,இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.மேலும்,தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/index.html இணையதளப் பக்கத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…