தமிழ்நாட்டில் வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு!
Election2024 : தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு பெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதன்படி, தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு மீதான பரிசீலினை நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, சேலத்தில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 27 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 12 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
கோவை தொகுதியில் 59 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 41 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தேனி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 43 மனுக்களில் 35 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வம் உட்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 28 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தகுதியுள்ள வேட்புமனுக்களை ஏற்கப்பட்டு, சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேசமயம் சில இடங்களில் வேட்மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.