#Breaking : குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும்.! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!
வரும் மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும். – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
இந்தியாவில் மிகப்பெரிய அரசு தேர்வாக கருதப்படும் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது கடந்த வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுகள்எழுத தமிழகத்தில் இருந்து சுமார் 22 லட்சதிற்கும் அதிகமானோர் விண்ணப்பத்து இருந்தனர்.
மிகப்பெரிய அரசு தேர்வு : அதிலிருந்து, 18,36,535 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை தேர்வர்கள் இம்முறை எழுதியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய அரசு தேர்வாக கடந்த முறை நடைபெற்ற தேர்வு பதிவாகியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகள் : இப்படி இருக்க மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் அது எப்போது வெளியாகும் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக தேர்வு முடிவுகள் குறித்து அறிவித்துள்ளது.
பணிச்சுமை : அதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் தேர்வுகள் எழுதியுள்ளதால் மூன்று மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது எனவும், தேர்வர்கள் எழுதிய இரு பாகங்களும் தனித்தனியாக ஸ்கேன் செய்து பதிவேற்றப்பட்டதால், அதற்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது எனவும், வரும் மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.